வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் 'ஆதார்' எண் இணைக்கும் பணி முடிவடைந்த நிலையில் ஒரு லட்சம் பேர் இன்னும் இணைக்காமல் உள்ளனர். ஆதார் இணைப்பை மின் ஆளுமை முகமை வாயிலாக சரிபார்க்கும் பணி நடக்கிறது.
இதுவரை சரிபார்ப்பு செய்ததில் சென்னையில் சவுகார்பேட்டை வேப்பேரி போன்ற பகுதிகளில் ஒரே நபர் 10க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளைப் பெற்றிருப்பது கண்டறிப்பட்டு உள்ளது.
தமிழக மின் வாரியம் 2.32 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. குடிசை வீடுகள் விவசாயத்திற்கு முழுதும் இலவசமாகவும் விசைத்தறிக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
வீடுகளில் இலவச சலுகையை பெற வேண்டும் என்பதற்காகவே சிலர் விதியை மீறி கூடுதல் தளம் எழுப்பியும், இணைப்பு கட்டடம்கட்டியும் மின் இணைப்பு பெற்றுள்ளனர்.
உத்தரவு
மேலும் சொந்த வீடுகள் வைத்திருக்கும் சிலர், வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 10ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
தமிழக அரசு இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. அதில் வீடுகளின் பங்குமட்டும் 5284 கோடி ரூபாய். மத்திய அரசு மானிய திட்டங்களில் பயனாளி களின் ஆதார் எண்ணை திட்டத்துடன்இணைக்க உத்தரவிட்டுள்ளது.
![]()
|
அதைப் பின்பற்றி இலவச மற்றும் மானியவிலை மின்சாரம் வழங்கப்படும் 2.67 கோடி நுகர்வோரின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணியை மின் வாரியம்2022 நவ., 15ல் துவக்கியது. இதற்கு பல முறை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் பிப்., 28ம் தேதியுடன், அவகாசம் முடிவடைந்தது.
இன்னும் ஒரு லட்சம் பேர் ஆதார் இணைக்காமல் உள்ளனர். அவர்கள் அரசு குடியிருப்புகளில் வசிப்பதால் தான் ஆதார் இணைக்கவில்லை என்பதை மின் வாரியம்கண்டறிந்துள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்ட நபர்களின் விபரங்களை மின் வாரியம் தமிழக மின் ஆளுமை முகமையிடம் வழங்கியுள்ளது. அதன் வாயிலாகவே ஒரே நபரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன என்பதுஉள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை சரிபார்த்ததில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னை சவுகார்பேட்டை வேப்பேரி, புரசைவாக்கம் போன்ற பகுதிகளில்ஒரே பெயரில் 10க்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
நடவடிக்கை
சரிபார்ப்பு பணி இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும். அப்போதுதான் ஒரே நபர் எத்தனை இணைப்பு பெற்றுள்ளார் என்பதும் சொந்த வீடு வாடகைதாரர்கள் தொடர்பான முழு விபரமும் தெரிய வரும். அதற்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.