ஈரோடு: ஈரோடு சூரம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் குண்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த, 21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
கடந்த, 26ல் அம்மன் முத்துபல்லாக்கு திருவீதி உலா; 28ல் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, குண்டம் இறங்குதல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இன்று மாலை, 7:00 மணிக்கு, மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.