வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: திரிபுராவில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நாகாலாந்தில் பாஜ - என்டிபிபி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
திரிபுராவில் பா.ஜ., முன்னிலை
60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இங்கு ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில் இடதுசாரிகள் 11 இடங்களிலும், காங்கிரஸ், 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
புதிதாக உருவான திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திரிபுரா மக்கள் முன்னணி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
மேகாலயா- முன்னிலை நிலவரம்
60 தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 19 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஒருங்கிணைந்த ஜனநாயக கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திரிணமுல் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
பாஜ 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

நாகாலாந்தில் பா.ஜ., முன்னிலை
60 தொகுதிள் கொண்ட நாகாலாந்தில் பா.ஜ., 12 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
என்டிபிபி கட்சி 23 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தேசிய மக்கள் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மற்ற கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.
இங்கு ஆட்சியில் இருக்கும் என்டிபிபி கட்சி பா.ஜ., கூட்டணியுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.