விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த செ.புதுாரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, ஆத்மா குழுத் தலைவர் ரவி முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் நிர்மலா தேவி அந்தோணிசாமி வரவேற்றார்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., புகழேந்தி, நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து வைத்து பேசினார்.
பி.டி.ஓ.,க்கள் சுமதி, நாராயணன், வருவாய் ஆய்வாளர் நாகராஜன், வி.ஏ.ஓ., அண்ணாமலை, மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால், கவுன்சிலர்கள் முகிலன், செல்வம், கண்காணிப்பு குழு உறுப்பினர் எத்திராசன், மாவட்ட பிரதிநிதி வினாயகமூர்த்தி, கருணாநிதி, ஒன்றிய தலைவர் சீனுவாசன், ஊராட்சி தலைவர் ஈஸ்வரி முருகன், ஊராட்சி துணைத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.