காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் தலைமை அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு, பல்வேறு சேமிப்பு கணக்குகளின் விபரம் மற்றும் வட்டி விகிதம் குறித்து வைக்கப்பட்டள்ள விளம்பர பதாகை, வாடிக்கையாளர்கள் அமரும் இருக்கைக்கு பின்புறம் மறைவான இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
இதனால், விளம்பர பதாகையில் உள்ள சேமிப்பு கணக்கு மற்றும் வட்டி விகிதங்களை வாடிக்கையாளர்கள் முழுமையாக படித்து தெரிந்துகொள்ள முடியாத சூழல் உள்ளது என, கோரிக்கை எழுந்தது.
இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, சேமிப்பு கணக்கு மற்றும் வட்டி விகிதம் குறித்த விளம்பர பதாகை வாடிக்கையாளர்களுக்கு பார்வையில் நன்கு தெரியும்படி இடமாற்றம் செய்து வைக்கப்பட்டு உள்ளது.