தஞ்சாவூர்:''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், பண நாயகத்தின் அடிப்படையில் தான் நடந்தது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், ஜனநாயகத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை. பணநாயகத்தின் அடிப்படையில் தான் தேர்தல் நடந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். 'பணம் பாதாளம் வரை பாயும்' ஆளும் கூட்டணி தேர்தலில் அதை தவறாக செயல்படுத்தியது துரதிர்ஷ்டமானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.