கோவை:வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா ,நாகாலாந்து, ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.,கூட்டணி முன்னிலை பெற்றது.
அதை கொண்டாடும் வகையில், நேற்று காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள கோவை பா.ஜ., அலுவலகம் முன் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் பா.ஜ.,தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் கோபிநாத், மாவட்ட பொருளாளர் செந்தில் மாவட்ட துணை தலைவர் குமரன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.