பொள்ளாச்சி:திரிபுரா, நாகலாந்து சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, பொள்ளாச்சியில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
வடமாநிலங்களான திரிபுரா, நாகலாந்து தேர்தலில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, பொள்ளாச்சி நகர பா.ஜ.,வினர், புதிய பஸ் ஸ்டாண்ட் முன், பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நகர தலைவர் பரமகுரு தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.