ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி குருசாமிக்கு 53, ஏழாண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த குருசாமி 2021 பிப்., 13ல் ராஜபாளையம் அருகேவுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார். குருசாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தும் நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.