சென்னை:மாநில அளவில், ஆர்.டி.ஓ.,க்கள் ஆய்வுக் கூட்டம், மார்ச் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்க உள்ளது.
சென்னை, சேப்பாக்கம், எழிலகம் கட்டடத்தின் ஐந்தாவது தளத்தில், மார்ச் 8ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், கோட்டாட்சியர் எனும் ஆர்.டி.ஓ.,க்கள் ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது.
தினமும் காலை 10:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை கூட்டம்நடக்கும்.
முதல் நாள் கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஆர்.டி.ஓ.,க்கள் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களும், தங்கள் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ.,க்களை, கூட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், கடிதம் எழுதி உள்ளார்.