சென்னை:கொரோனா வார்டு பழைய பெட்டிகளில், தரமான பெட்டிகளை தேர்வு செய்து, பார்சல் பெட்டிகளாக மாற்றும் பணிகள் நடந்துவருகின்றன.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது, 5,000க்கும் மேற்பட்ட ரயில்வே பெட்டிகள் பல்வேறு வசதிகளுடன், கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன.
தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால், இந்த பெட்டிகள் தேவையின்றி உள்ளன. எனவே தரமான பெட்டிகளை சீரமைத்து, மீண்டும் பயணியர் ரயில்பெட்டிகளாக மாற்றி வருகிறோம்.
ஓரளவுக்கு தரமான பெட்டிகளை தேர்வு செய்து, சரக்கு போக்குவரத்திற்கான பார்சல் பெட்டிகளாக மாற்றி வருகிறோம். நுாற்றுக்கணக்கான பழைய பெட்டிகள், 25 ஆண்டுகளை கடந்து விட்டதால், இரும்பு கழிவுகளாக மாற்றுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.