கோவை:சின்னவேடம்பட்டி, ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
சர்வதேச அறிவியல் தினத்தை கொண்டாடும் வகையில், பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், வகுப்பு வாரியாக மாணவர்கள், பல்வேறு அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர். மாணவர்களின் திறமைகளை கண்டு, ஆசிரியர்கள் பாராட்டினர்.
கண்காட்சியில், பாரதியார் பல்கலை பேராசிரியர் உதயகுமார், குமரகுரு கல்லுாரி பேராசிரியர் குமரேசன் ஆகியோர் மாணவர்களை உற்சாகப்படுத்தினர். சைதன்யா பள்ளி ஏ.ஜி.எம்., நாகேஸ்வரராவ், வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கிளாடிஸ் டயானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.