பெண்ணாடம்:பெண்ணாடம் அருகே, பைக்கில் சென்ற இருவர், அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம், இருளர் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன், 25, சுப்ரமணியன் மகன் மருதுபாண்டி, 32, இருவரும் உறவினர்கள்.
அய்யப்பன் தன் உறவினர் மருதுபாண்டியனுடன் பைக்கில், விருத்தாசலம் சென்றார். பின், இருவரும் பெண்ணாடம் திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று பகல் 1:30 மணிக்கு பெண்ணாடம் அடுத்த துறையூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திருச்சியில் இருந்து கடலுார் சென்று கொண்டிருந்த அரசு பஸ், இவர்களின் பைக் மீது மோதியது.
இதில், பைக்கில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தைக்கு, பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற போது, அய்யப்பன் இறந்தது, பெண்ணாடத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.