பெருந்துறை,-பெருந்துறை அருகே, மொபட் மீது மினி லாரி மோதியதில், திருமணத்துக்கு சென்ற பெண், தாயுடன் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் சிங்கநல்லுார், காட்டுவலசு, கருப்பம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி பூமணி, 45; தன்னுடைய தாய் சரஸ்வதியுடன், டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபட்டில், காஞ்சிக்கோவிலில் நடந்த உறவினர் திருமணத்துக்கு, பூமணி நேற்று மாலை சென்றார்.
காஞ்சிக்கோவிலை அடுத்த பூசம்பதி அருகே, எதிரே வந்த
டாடா ஏஸ் மினி லாரி, மொபட் மீது மோதியதில், இருவரும் பலத்த
காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக
தெரிவித்தனர்.
டாடா ஏஸ் வாகனத்த ஓட்டி வந்த, கருமாண்டிசெல்லிபாளையம், பாலன் நகரை சேர்ந்த சூரியா, 29, மீது, காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.