கட்டட தொழிலாளர்கள் சங்க கூட்டம்
கரூர்,-கரூர் காந்தி கிராமத்தில், ஏ.ஐ.டி.யு.சி. கட்டட தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். வரும் 8-ல், பெண் கட்டுமான தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு தீர்வு காண வலியுறுத்தி, மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்களை சந்தித்து, அவர்கள் மூலம் முதல்வருக்கு மனு அனுப்புவது, கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை அரசு தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் வடிவேலன், பொருளாளர் கலாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
மேம்பாலத்தில் மணல் குவியல்
கரூர்,-கரூர், வெங்ககல்பட்டி மேம்பால ஓரத்தில் படிந்துள்ள மணல் குவியலை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் - திருச்சி பைபாஸ் சாலையில், வெங்ககல்பட்டி அருகே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கரூரில் இருந்து திண்டுக்கல் மற்றும் கடவூர் மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. இந்நிலையில், மேம்பாலத்தில் அதிகளவு மணல் குவிந்துள்ளது. இதனால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், வெங்ககல்பட்டி மேம்பாலத்தில்
படிந்துள்ள மணல் குவியலை அகற்ற வேண்டும்.