சிதம்பரம்: சிதம்பரத்தில் பட்டப் பகலில் பெண் ஒருவர் 'போதை' காதலனை தாக்கிய சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் மேல வீதியில் மது போதையில் இருக்கும் வாலிபர் ஒருவரை, பெண் ஒருவர் திடீரென தாக்கும் சம்பவம் நடந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தாக்கியது, காதலி, என்றும் தாக்கப்பட்டவர் காதலன் என்பதும் தெரியவந்துள்ளது.
அதில் காதலனின், சட்டையை பிடித்து இழுத்து 'உனக்கெல்லாம் எதுக்குடா, கல்யாணம். குடிச்சிட்டு போதையில் இருக்க, எதுக்கு மது குடிக்கிறாய்' என்று அந்தப் பெண், வாலிபரை பிடித்து இழுத்து தாக்குகிறார்.
தாக்கும் பெண்ணிடம் அந்த வாலிபர் 'மேலவீதியே பார்க்கிறது. சட்டையை விடு' என கெஞ்சுகிறார். ஆனால் அந்த பெண் சட்டையை விடாமல் வாலிபரை சகட்டுமேனிக்கு உதைக்கிறார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.