கரூர் திருமாநிலையூரில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.
அப்போது அவர், 'சூரிய மின்சக்தி உற்பத்தியில், ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக சில தினங்களுக்கு முன், சூரியசக்தி வாயிலாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
'அத்துடன் புதிதாக, 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணிகளும் துவக்கப்பட்டு உள்ளன. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை, முதல்வர் துவங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'கோடைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு... தி.மு.க., ஆட்சின்னாலே மக்களுக்கு, 'கரன்ட் கட் அலர்ஜி' தான் ஞாபகம் வரும்... அதிலும், அமைச்சர்புள்ளி விபரங்களை அள்ளி விடுறதைப் பார்த்தா, கொஞ்சம் பயமா தான் இருக்கு...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.