ராமேஸ்வரம்-- --முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் முதல்வர் நீடூழி வாழ வேண்டி நகராட்சி தலைவர்நாசர்கான் தலைமையில் தி.மு.க., வினர் சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள மனோலயா இல்லம்,முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆகிய இல்லங்களில் அன்னதானம் வழங்கினர்.
மேலும் நகராட்சி 21 வார்டுகளில் தி.மு.க., கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். இதில் நகராட்சி துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் சத்யா, முகேஷ்குமார், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* மண்டபத்தில் பேரூராட்சி தலைவர் ராஜா, துணை தலைவர் நம்புராஜன் உள்ளிட்ட தி.மு.க., வினர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடினர். வேதாளை ஊராட்சியில் தலைவர் செய்யது அல்லா பிச்சை தலைமையில் தி.மு.க., வினர் பிரியாணி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
*மண்டபம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மரைக்காயர்பட்டினம், சிங்கார தோப்பு, மண்டபம் முகாம் பள்ளிகளை சேர்ந்த இல்லம் தேடி கல்விமையம் தன்னார்வலர்கள் இணைந்து முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
பெரியபட்டினம் துவக்க பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் லியோன் முன்னிலை வகித்தார். பொது அறிவு போட்டியில் வென்றவர்களுக்கு வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ததேயு ராஜ் பரிசு வழங்கினார்.