கமுதி-கமுதி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்தில் கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் 6 குவிண்டால் பருத்தி கொண்டு வரப்பட்டது. ஒரு குவிண்டால் ரூ.6100க்கும் குறைந்தபட்சமாக ரூ. 5500க்கும் விற்பனையானது. வியாபாரிகளின் பருத்தி ஒட்டுமொத்தமாக ரூ.33,755க்கு விற்பனையானது.
விற்பனை குழு செயலாளர் ராஜா கூறுகையில், இனி வரும் காலங்களில் விவசாயிகள் மறைமுக ஏலத்தில் அதிகளவில்கலந்து கொண்டு விளைப்பொருட்களை விற்க வேண்டும். இதன் மூலம் கமிஷன், இடைத்தரகர் இன்றி விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.
இனி உள்ளூர் வணிகர்களுடன் வெளியூர் வணிகர்களை வரவழைத்து மறைமுக ஏலம் நடைபெறும். எனவே மறைமுக ஏலத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும், என்றார்.
கண்காணிப்பாளர் நேசமணி, சந்தை பகுப்பாய்வாளர் ராஜு உட்பட பலர் பங்கேற்றனர்.