சாயல்குடி-சாயல்குடி பேரூராட்சி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக தொடர்ந்து பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் போக்கு நிலவுகிறது.
அரசியல் கட்சிகள், திருமணம், காதணி விழா, திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பிளக்ஸ் பேனர்கள் பெரியளவில்போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் வைக்கப்படுவதால்விபத்து அபாயம் நிலவுகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசில் புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.