மரம் வெட்டியவர் மீது நடவடிக்கை தேவை
திருக்கழுக்குன்றம் தாலுகா புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சத்யா ஷோரூம் எதிரில், மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று இருந்தது.
அதை, நேற்று அரசு அனுமதி இன்றி, யாரோ ஒருவர் இரவு நேரத்தில் வெட்டிவிட்டார். இந்த மரம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இல்லை.
பொதுமக்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்த இந்த மரத்தை வெட்டியவர்களின் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மா. கணேசன், திருக்கழுக்குன்றம்.
ஏரிக்கரை குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டுகோள்
சித்தாமுர் அருகே மாம்பக்கம் ஊராட்சிக்குட்பட்ட சித்துார் கிராமத்தில், ஏரிக்கரை பகுதியில், கிராமத்தின் குடிநீர் கிணறு உள்ளது.
சரியாக பராமரிக்காமல், குடிநீர் கிணறு மூடியின்றி காணப்படுகிறது.
இதனால், குடிநீரை பயன்படுத்த, சித்துார் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், கிணற்றின் மேற்பகுதியில் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா.ரஞ்சித், சித்தாமூர்.