தியாகதுருகம் : தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி தாளாளர் இல்லத்தில் அமைச்சர் வேலு, மணமக்களை வாழ்த்தினார்.
தி.மு.க., முன்னாள் தென்னாற்காடு மாவட்ட பொறுப்பாளர் பொன் ராமகிருஷ்ணன் பேரனும், தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் - அருணா தம்பதியின் மகன் டாக்டர் அரவிந்தன், மணமகள் டாக்டர் நந்தினி திருமணம் கடந்த மாதம் 12ம் தேதி திருப்பதியில் நடந்தது.
நேற்று அமைச்சர் வேலு, தியாகதுருகத்தில் உள்ள மணமகன் இல்லத்திற்குச் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் கம்பன் உடனிருந்தனர். நகர செயலாளர் மலையரசன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, பெருமாள், அய்யனார், ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை.
காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர், தி.மு.க., நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், விசு, மூர்த்தி, முரசொலிமாறன், செல்வம், கருணாநிதி, அருட்செல்வன், அமுதா, கோபால், அஜித்குமார் உடனிருந்தனர்.