அவிநாசி:அவிநாசியில், கோவை - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், பழங்கரை முதல் கணினி ரவுண்டானா வரை 6.8 கி.மீ., துாரம் ரோட்டில் மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில், பலரும் போஸ்டர் ஒட்டியதால், இவற்றை கிழித்து, பெயின்ட் அடிக்கப்பட்டது. இப்பணி முடிந்த சில நாட்களிலேயே, கடந்த 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மையத்தடுப்பில் ஆங்காங்கே ஆளுங்கட்சியினர் சமூகப்பொறுப்பின்றி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சுப்பிரமணி கூறுகையில், ''மையத் தடுப்புக்கு 2 கி.மீ., துாரத்துக்கு 10 லட்சம் ரூபாய் செலவாகிறது. இது மக்களின் வரிப்பணம் என்பதை போஸ்டர் ஒட்டுபவர்கள் உணர வேண்டும்,'' என்றார்.