அந்தமான் சிறை மாடலில் புதுடில்லியில் அமைக்க நிதி ஒதுக்கீடு

Added : மார் 04, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: அந்தான் தீவில் உள்ள செல்லுலார் சிறை போன்று டில்லியில் சிறைச்சாலை வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் பிரிட்டீஸ் அரசுக்கெதிராக போராட்டம் நடத்தியவர்கள் அந்தமான், 'செல்லுலார்' சிறையில் காற்று, வெளிச்சம் இல்லாத அறைகளில் அடைக்கப்பட்டனர். இதில பலர் நோயுற்று சிகிச்சை
 Prison Modelled On Cellular Jail In Andamans To Come Up In Delhi

புதுடில்லி: அந்தான் தீவில் உள்ள செல்லுலார் சிறை போன்று டில்லியில் சிறைச்சாலை வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் பிரிட்டீஸ் அரசுக்கெதிராக போராட்டம் நடத்தியவர்கள் அந்தமான், 'செல்லுலார்' சிறையில் காற்று, வெளிச்சம் இல்லாத அறைகளில் அடைக்கப்பட்டனர். இதில பலர் நோயுற்று சிகிச்சை கிடைக்காமல் இறந்தனர். அந்தமானுக்கு கப்பலில் செல்லும் போதே, கடலில் குதித்து பலர் மாண்டனர்; குடும்பத்தை விட்டு, உறவுகளை பிரிந்து, பல ஆண்டுகள் சிறையில் வாடினர்.
இந்நிலையில் அந்தமான் தீவில் உள்ளது போன்ற செல்லுலார் சிறைசாலையை புதுடில்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக வடக்கு டில்லியின் நரிலா என்ற பகுதியில் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ரூ. 120 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா
04-மார்-202311:11:35 IST Report Abuse
ASIATIC RAMESH வருங்காலங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு துணைபோகும் அரசு அலுவலர்களையும் அரசியல்வாதி பெயரைச்சொல்லி ஊழல் செய்யும் அலுவலர்களையும் அடைக்க கண்டிப்பாக பயன்படும்... தயவு செய்து அங்கு எந்த சொகுசு வசதிகளையும் செய்துவிடாதீர்கள்... முடிந்தால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டுகளை பாதுகாப்புக்கும் கண்காணிக்கவும் பயன்படுத்துங்கள்...
Rate this:
Cancel
Kali Maulee - Madurai,இந்தியா
04-மார்-202305:07:28 IST Report Abuse
Kali Maulee சாவர்க்கர் சிறை என்று பெயர் வைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X