புதுடில்லி: அந்தான் தீவில் உள்ள செல்லுலார் சிறை போன்று டில்லியில் சிறைச்சாலை வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் பிரிட்டீஸ் அரசுக்கெதிராக போராட்டம் நடத்தியவர்கள் அந்தமான், 'செல்லுலார்' சிறையில் காற்று, வெளிச்சம் இல்லாத அறைகளில் அடைக்கப்பட்டனர். இதில பலர் நோயுற்று சிகிச்சை கிடைக்காமல் இறந்தனர். அந்தமானுக்கு கப்பலில் செல்லும் போதே, கடலில் குதித்து பலர் மாண்டனர்; குடும்பத்தை விட்டு, உறவுகளை பிரிந்து, பல ஆண்டுகள் சிறையில் வாடினர்.
இந்நிலையில் அந்தமான் தீவில் உள்ளது போன்ற செல்லுலார் சிறைசாலையை புதுடில்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக வடக்கு டில்லியின் நரிலா என்ற பகுதியில் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ரூ. 120 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.