மாமல்லபுரம்:மாமல்லபுரம் மீனவர் பகுதியைச் சேர்ந்த காதர் என்பவரின் மனைவி சரளா, 55. நெம்மேலி தர்கா பகுதியில் வசித்து, அங்கு வருவோரிடம் யாசகம்பெற்று வாழ்ந்து வந்தார்.
புதிய கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மணிகண்டன், 21, நேற்று முன்தினம், சரளாவை பாலியல் ரீதியாக துன்புறுத்திஉCள்ளார்.
அப்போது, கத்தியைக் காட்டி, கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.
இதைக் கண்டு, அங்கிருந்தவர்கள், வாலிபரை பிடிக்க முயன்றபோது, அவர் தப்பினார். சவுக்குத் தோப்பில் மறைந்திருந்தவரை பிடித்து, மாமல்லபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.