மதுரவாயல்:சென்னையைச் சேர்ந்த, 27 வயது பெண், மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் அப்பெண் கூறியிருந்ததாவது:
என்னுடன் சிறு வயதில் இருந்தே பழகி வந்த நிஷாந்த், நான் 10ம் வகுப்பு படிக்கும் போதே என்னை காதலித்து வந்தார்.
திருமண ஆசை காட்டி, என்னை பல முறை பலாத்காரம் செய்தார். என் பூர்வீக சொத்தை விற்ற பணத்தில், நிஷாந்த் 68 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டார்.
ஆனால், தற்போது அவரின் நடவடிக்கை சரியில்லை.
தனியார் மருத்துவமனை ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவரின் மகளை, நிஷாந்த் திருமணம் செய்ய உள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுத்து, அந்த திருமணத்தையும் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று நடக்க இருந்த நிஷாந்த் திருமணம் நிறுத்தப்பட்டது.
ஆனால், நிஷாந்த் தலைமறைவாகி விட்டார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.