திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், 'டாஸ்மாக்' மேற்கு மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட மேலாளராக கலைமன்னன், 55, உள்ளார்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த தாணு என்பவர், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தில் புதிய 'பார்' தொடங்கவும், ஏற்கனவே உள்ள பார்களை தொடர்ந்து செயல்படுத்தக் கோரியும், அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இம்மனுவை பரிசீலனை செய்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கலைமன்னன், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக, தாணு, திருவள்ளூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதன்படி டி.எஸ்.பி., கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் நேற்று மதியம், காக்களூர் டாஸ்மாக் குடோனில் கண்காணித்தனர்.
அவர்களின் நடவடிக்கையில், டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன், அவரது வாகன ஓட்டுனர் சங்கர் ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.