ஆத்துார்,-ஆத்துாரில் இருந்து கேரளாவுக்கு மினி லாரியில் நெல் அறுவடை இயந்தரம் ஏற்றிச்சென்றனர்.
நேற்று இரவு, 7:00 மணிக்கு நரசிங்கபுரம் வழியே சென்றபோது, வாழப்பாடி அருகே பேளூரில் இருந்து, ஆத்துார் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ்சின் ஒருபகுதி சேதமடைந்தது.
இதனால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்துார் டி.எஸ்.பி., ஹரிசங்கரி(பொ) தலைமையில் போலீசார், விபத்து ஏற்பட்ட வாகனங்களை மீட்ட பின், போக்குவரத்து சீரானது.
ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.