வாழப்பாடி--வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது சேலம் மாவட்டங்களில் வெயில் அதிகரித்துள்ளது. இதனால் கம்மங்கூழ், தர்பூசணி, இளநீர், எலுமிச்சை, சாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு வகை ஜூஸ் வகைகளை வாங்கி மக்கள் குடிக்கின்றனர்.
இதனால் எலுமிச்சை பழ தேவை அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி, பிப்ரவரியில், 5-க்கு விற்ற பெரிய அளவு எலுமிச்சை பழம், தற்போது, 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 3க்கு விற்ற பழம், 10 ரூபாய், 2-க்கு விற்ற பழம், 8 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.