வெள்ளகோவில்,-வெள்ளகோவிலில் துணி வியாபாரி வீட்டில், பட்டப்பகலில் நகை, பணம் திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளகோவில், நடேசன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 33, துணி வியாபாரி. தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், கரூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மனைவி சத்திய பிரியங்கா அருகேயுள்ள அவர் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று மதியம் ஈஸ்வரமூர்த்தி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் தகவலின்படி சத்திய பிரியங்கா சென்றார். பிரோவும் திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த, 1.20 லட்சம் ரூபாய், 20 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி வெள்ளகோவில் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.