சத்தியமங்கலம்,-கோடையில் வனப்பகுதியில் ஏற்படும் வனத்தீயை கட்டுப்படுத்தி, வன உயிரினங்களை காப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி தாளவாடியில் நேற்று நடந்தது.
தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், வனத்துறையினர் கலந்து கொண்டனர். பள்ளியில் தொடங்கிய பேரணி, தாளவாடி பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. மாணவர்கள் கோஷமிட்டு, பதாகை ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement