ஓசூர்,-கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம், ஓசூர் மீரா மகால் திருமண மண்டபத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடக்கிறது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளை செயலாளர்கள் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒவ்வொரு பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி எவ்வாறு கொண்டாடுவது; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிப்பது மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.