வாக்காளர் பட்டியலில் இணைக்க 66 சதவீதம் பேர் 'ஆதார்' சமர்ப்பிப்பு

Updated : மார் 04, 2023 | Added : மார் 04, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை-தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் இணைக்க, 66.24 சதவீத பேர், தங்களின் 'ஆதார்' எண்ணை வழங்கி உள்ளனர்.தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு பணி, கடந்த ஆண்டு ஆக., 1ல் துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்தனர். இப்பணி இம்மாதம், 31ம் தேதி வரை நடக்க உள்ளது.ஓட்டுச்சாவடி அலுவலரிடம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் இணைக்க, 66.24 சதவீத பேர், தங்களின் 'ஆதார்' எண்ணை வழங்கி உள்ளனர்.



latest tamil news


தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு பணி, கடந்த ஆண்டு ஆக., 1ல் துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்தனர். இப்பணி இம்மாதம், 31ம் தேதி வரை நடக்க உள்ளது.


ஓட்டுச்சாவடி அலுவலரிடம், ஆதார் எண் வழங்க முடியாதவர்கள், https://www.nvsp.in என்ற இணையதளம் வழியாக, 'Voter Help Line' மொபைல் செயலி வழியே, ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


துவக்கத்தில், வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக, ஆதார் எண் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்தது. தற்போது, இப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.


கடந்த மாதம் வரை, 66.24 சதவீதம் பேர், அதாவது, 4.08 கோடி வாக்காளர்கள், தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர்.


அதிகபட்சமாக, அரியலுார் மாவட்டத்தில், 97.83 சதவீதம்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 93.14 சதவீதம் வாக்காளர்கள், ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலில் இணைக்க வழங்கி உள்ளனர்.


latest tamil news


மிகவும் குறைந்தபட்சமாக, சென்னை மாவட்டத்தில், 31.92 சதவீத வாக்காளர்கள் மட்டுமே, தங்கள் ஆதார் எண்ணை வழங்கி உள்ளனர். மற்ற மாவட்டங்களில், ஆதார் எண் இணைப்பதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் முகாம் ஏதும் நடத்தப்படவில்லை.


31ம் தேதி கடைசி நாள்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் ஆதார் எண், தேர்தல் கமிஷன் வழங்கிய மென்பொருள் வழியாக, கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆதார் எண் சேகரிப்பு பணி முழுமையானதும், வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி துவங்கும்.வாக்காளர்கள் ஆதார் எண் வழங்க, இம்மாதம், 31ம் தேதி கடைசி நாள். எனவே, ஆதார் எண் வழங்காத வாக்காளர்கள், விரைவாக வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

S VAIDHYANATHAN - chennai,இந்தியா
04-மார்-202313:34:41 IST Report Abuse
S VAIDHYANATHAN Nobody visited us to collect the details. Why not the y conduct a campaign in the booth level. The mobile app is very cumbersome.
Rate this:
Cancel
Ramasamy - sydney,ஆஸ்திரேலியா
04-மார்-202312:56:46 IST Report Abuse
Ramasamy ஆதார் இணைப்பு கட்டாயம் கிடையாது என்று சொல்லி தான் தேர்தல் ஆணையம் சேகரிப்பு பணியை தொடங்கியது. இப்போதும் அதையே சொல்லுகிறது. கட்டாயம் இல்லை என்பதை செய்ய வேண்டாம் என முடிவு செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆதார் இணைப்பதால் எந்த பயனும் இல்லை.
Rate this:
Cancel
Chandrasekaran - Chennai,இந்தியா
04-மார்-202309:56:29 IST Report Abuse
Chandrasekaran I have submitted my aadhaar with voter card along with my wife & daughter in the month of November 2022 through nvsp portal. Still it is not linked. Status is showing that it is still pending. I, am not able to submit again through voters helpline as it is saying already submitted. Heavy delay.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X