புதுச்சேரி : புதுச்சேரி, கலிதீர்த்தாள்குப்பம் எம்.ஐ.டி., கல்லுாரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.
சென்னை, ஜோகோ நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை துவக்கி வைத்து, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசினார்.
புதுச்சேரி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா, தலைவர் ரட்ஜராம், தேசிய அறிவியல் தினம் குறித்து பேசினார்.
கண்காட்சிகள் தமிழகம், புதுச்சேரி பொறியியல் கல்லுாரி மாணவர்களின் 200க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றன.
பெங்களூரு, போர்செமி கண்டக்டர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விநாயகபாவு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழக பேராசிரியர் ஜயராஸ், கவுரவ செயலாளர் திருஞானம் ஆகியோர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
பேராசிரியர் ஆனந்த் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசிரியர் சுமித்ரா நன்றி கூறினார்.