புதுச்சேரி: தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம் ஏ.ஜெ., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
தவளகுப்பம் அடுத்த டி.என்.பாளையத்தில் உள்ள ஏ.ஜெ., சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்தாண்டு மாநில மற்றும் மண்டல அளவில் கராத்தே, யோகா, ரோலர் ஸ்கேட்டிங், குண்டு எறிதல், ஓட்டப் பந்தயம், மட்டைப்பந்து மற்றும் பேஸ்பால் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த மாதம் தேசிய அளவில் நடந்த 'பென்காக்' போட்டியில் மாணவிகள் செஞ்சோலை, செம்மொழி ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று மாநிலத்திற்கு பெருமைத் தேடித்தந்தனர்.
அதேபோன்று 7 வது மாநில அளவிலான கராத்தே போட்டியில் அனைத்து கட்டா பிரிவிலும் முதல் பரிசு மற்றும் சாம்பியன்ஷிப் விருது பெற்று சாதனை புரிந்தனர்.
மண்டல அளவிலான ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், மற்றும் பேஸ்பால் போட்டிகளில் மாணவர்கள் வினீத் மற்றும் ஹஸ்ரிக் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்றனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர்கள் மேரி ஜான்சன், மேரி ஜீனா ஜான்சன் ஆகியோர் கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை அளித்தும், பரிசு வழங்கி பாராட்டினர்.
காத்தே பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணன் நன்றி கூறினார்.