காரைக்கால் : காரைக்காலில் காங்., கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை மக்கள் சந்திப்பு நடைபயணம் நடந்தது.
திருப்பட்டினத்தில் துவங்கிய நடைப்பயணத்திற்கு காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் கருணாநிதி வரவேற்றார். திருப்பட்டினம் போலகத்தில் துவங்கிய நடைப்பயணம் முக்கிய வீதிகள் வழியாக திருமலைராயன் ஆற்றுபாலத்தில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில், தேர்தல் வாக்குறிதிகளான கூட்டுறவு கடன் தள்ளுபடியை ஆளும் அரசு நிறைவேற்றாதது, 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நடைப்பயணத்தில் வட்டார தலைவர் சுப்பையன், மகிளா காங். மாவட்ட தலைவி நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.