திருக்கனுார்: திருக்கனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருக்கனுார் ஏரிக்கரையில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பொறுப்பு மருத்துவர் சக்திதரன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், மருத்துவர் முத்துலட்சுமி, ஹோமியோபதி மருத்துவத்தின் முக்கியத்துவம், அதன் சிறப்புகள் மற்றும் உணவு முறைகள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, ஹோமியோபதி மாத்திரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இதில், கிராமப்புற செவிலியர்கள் பனிமலர், மகாலட்சுமி, தேவி, ஆஷா பணியாளர் ராதாபாய், கிராமத்திட்ட பணியாளர் உதுமான் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.