திருக்கனுார் : சந்தை புதுக்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது.
காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 2ம் ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம் கடந்த 24ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து, 28ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் (2ம் தேதி) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பதிவிளக்கு பூஜை நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று மயான கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு, அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயன், காட்டேரி, பூங்கோத்தி நிசானி செடல் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர், அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில், சந்தை புதுக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர்.