இன்றைய கட்டுமான தொழில்நுட்பத்தில் பல்வேறு நிலைகளில் கார்பன் பைபர் பயன்படுத்தப்படுகிறது.
கார்பன் பைபர் வலிமையானது. உழைக்கும், நெகிழ்வுத் தன்மை கொண்டது. அதனால் கட்டுமானத்திற்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கிறது. இது அடர்த்தி, எடை குறைவாகவும் அதே நேரம் வலிமை அதிகமாக இருக்கும். கார்பன் பைபர் என்பது நீளமான மெல்லிய கார்பன் அணுக்களால் ஆன பாலிமர். கிறிஸ்டல் வடிவத்தில் இருக்கும். இரும்பை விட ஐந்து மடங்கு வலிமையானது. எடை குறைவாக, உறுதியாக இருக்கும்.
இந்த கார்பன் இழைகளை ஒன்றோடு ஒன்று பின்னி ஒரு வடிவத்திற்கு கொண்டு வருகிறார்கள். வீட்டு ஜன்னல்கள், கதவு, வெளிப்புற பட்டி, துாண்கள், வேலிகளுக்கு பயன்படுகிறது.
நெகிழ்வு தன்மை
நெகிழ்வு தன்மையுடன் இருப்பதால் வளைந்து கொடுக்கும். இதில் விரிசல் ஏற்படுவதை தவிர்க்கிறது. கான்கிரீட் மற்றும் இரும்பு போல் விரிசல்கள் ஏற்படாது. எடை தாங்கும். கார்பன் பைபர் ஈரப்பதம், மழை, கதிர்வீச்சு, ரசாயனங்கள் போன்றவற்றை எதிர்க்க கூடியதாய் இருப்பதால் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது. இரும்பு ஷீட், கிரிட்களுக்கு பதில் கார்பன் பயன்படும்.
செலவு குறையும்
சான்ட்விச் வால் பேனல்களில் கார்பன் பைபர் கிரிட், டிரஸ் வெளிப்புற கட்டுமான பகுதிகளான கான்கிரீட் துாண்கள் போன்றவற்றில் அதிகம் பயன்படும்.
நேரத்தை, செலவை குறைக்கும். பாலம் கட்டும் போது கான்கிரீட் நிரப்ப ஸ்டீல் பயன்படும். ஆனால் தற்போது இந்த இடங்களில் இரும்பிற்கு பதிலாக கார்பன் பைபர் பயன்படுத்துகின்றனர். நீடித்த ஆயுளும், துருபிடிக்காததாகவும், ஈரப்பதத்தை தாங்க கூடியதாகவும், ரசாயன மாற்றங்களை எதிர்க்க கூடியதாகவும் இருக்கிறது.
பழைய கட்டுமானங்களை ரிப்பேர் செய்யும் போது அங்கு இரும்பு கம்பிகளுக்கு பதில் கார்பன் பைபர் பயன்படுத்துவர்.எப்.ஆர்.பி., லேமினேட் என்ற பொருளை கட்டுமான வடிவங்களில் ரெசின் கொண்டு பதிப்பர். இதனால் பீம், ஸ்லாப்களின் ஆயுட்காலம் நீட்டிக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.