சென்னை:தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 88 ரூபாய்உயர்ந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம், 5,240 ரூபாய்க்கும்; சவரன், 41 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி, 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 11 ரூபாய் உயர்ந்து, 5,251 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 88 ரூபாய் அதிகரித்து, 42 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement