கோவை:கோவை விமான நிலைய சுற்றுச்சூழல் மேலாண்மை குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது; கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், விமான நிலைய சுற்றுச்சுவருக்கு வெளியே உள்ள கால்வாயில் தேங்கும் கழிவு நீரை தொடர்ந்து சுத்தம் செய்தல்; விமானம் பறப்பதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை கத்தரித்தல், மரங்களை அகற்றுதல், விமானங்கள் பறக்கும்போது பறவைகள் தாக்குதலை தவிர்க்க, விமான நிலையத்தை சுற்றியுள்ள வெளிப்பகுதிகளில், உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கமலகண்ணன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.