ஸ்ரீநகர்: காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சொத்துக்களை என்.ஐ.ஏ. முடக்கியுள்ளது. காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பஷீர் அகமது பீர் என்ற இம்தியார் ஆலம். பாகிஸ்தானில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்பில் இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டும், இந்தியாவிற்குள் ஊடுருவ உதவிசெய்தும் வந்துள்ளான்.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்.. கடந்த பிப்.20-ம் தேதி ராவல்பிண்டியில் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இவனுக்கு சொந்தமா அசையா சொத்துக்கள் குப்வாராவில் உள்ள கிராமத்தில் உள்ளது. இதனை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பு நேற்று முடக்கியது.