கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், அரசு தேர்வாணைய அமைப்புகள் நடத்தும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள, இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சி மையத்திறப்பு விழா, வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது.
இம்மையத்தை, கோவை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான, பயிற்சி வகுப்பில் பங்கேற்க இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்புகள், மாலை 5:00 முதல் 8:00 மணி வரை ஆறு மாத காலம் நடைபெறவுள்ளது. ஒரு பருவத்திற்கு 200 பேர் வீதம், ஆண்டுக்கு 400 பேர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இதுகுறித்த முழுமையான தகவல்கள், பல்கலை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். பயிற்சி மையத்தில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு பெற்றவர்களின் விபரங்கள், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும் என, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.