சிவகங்கை: சிவகங்கை கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நாளை முதல் மார்ச் 10 வரை தங்க பத்திரம் கிடைக்கும் என அஞ்சல் கண்காணிப்பாளர் சுப்பிரமணிய பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க பத்திர முதலீடு திட்டம் சிவகங்கை கோட்டத்திலுள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் நாளை முதல் மார்ச் 10 வரை கிடைக்கும்.
இது ரிசர்வ் வங்கி எட்டு ஆண்டு முதலீடு தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி வழங்கப்படும். இந்த வட்டி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு கிராம் தங்க பத்திரம் ரூ.5611.
முதலீடு செய்ய விரும்புவோர் நாகலிங்கம், தலைமை அஞ்சல் அதிகாரி,சிவகங்கை தலைமை அஞ்சலகத்தில் 94439 76740 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Advertisement