திருத்தணி:திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ஒரு முறை மட்டும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அனுமதி வழங்கி, அடுத்த முறை வரும் போது கட்டாயம் வழக்கு பதியப்படும் என அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் மேற்பார்வையில், திருத்தணி சட்டம் - ஒழுங்கு எஸ்.ஐ., ராக்கிகுமாரி நேற்று திருத்தணி - -அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, முருகன் கோவில் மலைப்பாதை அருகே வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தினார்.
பின், 'ஹெல்மெட் அணிந்தால் உயிரை காப்பாற்றலாம். ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்படும். இனி வரும் நாட்களில் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என்றார்.