சாத்துார்: சாத்தூர் -கோவில்பட்டி மெயின் ரோட்டில் பழைய வைப்பாற்று பாலம் பகுதியில் புதிய கூட்டு குடிநீர் திட்ட குழாய்க்காக கொண்டுவரப்பட்ட குழாய்கள் பதிக்கப்படாமல் வீணாகி வருகின்றன.
சாத்தூர் விருதுநகர் அருப்புக்கோட்டை ஆகிய 3 நகராட்சிகளுக்காக புதியதாக ரூ 44O கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு நடந்து வருகிறது.
இதற்காக புதியதாக குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் வேலை நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த பணி ஆமை வேகத்தில் நடப்பதால் திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சாத்தூர் நகர் பகுதியில் பதிக்க கொண்டு வரப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் வைப்பாறு பழைய பாலம் பகுதியில் பல மாதங்களாக பதிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் சேதம் அடைவதோடு அரசின் நிதி வீணாகும் அபாயம் உள்ளது.
குழாய்களை விரைந்து பதிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.