ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில், நிலையான வருமானம் தரும் திட்டங்களான எப்டி., பாண்ட்கள், கடன் பத்திரங்கள் மீதான ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 8% வளர்ச்சித் தரும் போர்ட்போலியோவை அமைப்பது எப்படி என பார்ப்போம்.
கோவிட் மற்றும் உக்ரைன் - ரஷ்யா போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது போன்ற காரணங்களால் உலகளவில் பணவீக்கம் அதிகரித்தது. இதனைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தி வருகிறது. வட்டியை உயர்த்தும் போது அதிக பணம் முதலீடுகளுக்கு திரும்பி, மக்களிடையே பணப்புழக்கம் குறையும். பணப்புழக்கம் குறைவதால் தயாரிப்புகள், சேவைகளுக்கான தேவை குறையும். தேவை குறைவதால் விலைவாசி கட்டுக்குள் வரும் என்பது தியரி. அந்த வகையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வந்துள்ளது.
![]()
|
நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு இந்த பத்திரங்களை வெளியிட்டு பணம் திரட்டும். இவற்றை நிறுவனப் பங்குகளாக மாற்ற முடியாது. இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை. என்.சி.டி.,க்களில் ஏஏ போன்ற நல்ல ரேட்டிங் பெற்ற பத்திரங்கள் உள்ளன. அவை 8 - 9% ரிட்டர்ன் தருகின்றன. இவற்றில் ரிஸ்க்கும் உள்ளது. ரேட்டிங் பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.
இவற்றில் கிரெடிட் ரிஸ்க் மற்றும் வட்டி விகித ரிஸ்குகள் உள்ளன. அதாவது வட்டி விகித மாறுதலுக்கு ஏற்ப இந்த திட்டம் தரும் வருமானம் கூடும், குறையும். கிரெடிட் ரிஸ்க் என்பது என்.சி.டி.,யை வெளியிட்ட நிறுவனம், நிர்வாகமின்மை அல்லது நிறுவனம் நஷ்டமடைவது போன்ற காரணத்தால் பத்திரங்களுக்கு பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் போகும். உதாரணத்திற்கு யெஸ் வங்கி இந்த வகையில் ரூ.8400 கோடிக்கு வெளியிட்ட ஏடி1 பத்திரங்களை 2020ல் ரைட் ஆப் செய்தது.
![]()
|
வளர்ந்து வரும் தனியார் வங்கிகள் பலவும் வைப்புத் தொகைக்கு 8% ரிட்டர்ன் வழங்குகின்றன. உதாரணத்திற்கு பந்தன் வங்கி 600 நாள் டெபாசிட்டிற்கு 8% வட்டி தருகிறது. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி 300 நாள் டெபாசிட்டிற்கு 8% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்கள் எனில் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட வங்கி 8.5% வட்டி தருகிறது.
இவை தவிர ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் எனும் எஸ்.எப்.பி.,க்கள் 9% வரையும், மூத்த குடிமக்கள் எனில் 9.5% வரையும் வைப்புத் தொகைக்கு வட்டி வழங்குகின்றன. இதற்கான காலம் 1000 நாட்கள் (2.7 ஆண்டுகள்) ஆக உள்ளது.
என்.பி.எப்.சி., எனும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் வைப்புத் தொகை பெறுகின்றன. பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் போன்றவைகள். அவற்றிலும் 8 - 9% வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் இவற்றில் போடும் பணத்திற்கு இன்சூரன்ஸ் கவர் கிடையாது. அதாவது வங்கியில் போடும் பணத்தில் ரூ.5 லட்சம் வரை, வங்கி திவால் ஆனாலும் கிடைக்கும். ஆனால் இதில் அவ்வாறு நிகழ்ந்தால் எந்தப் பணமும் கிடைக்காது.