சீனர்கள் சாப் ஸ்டிக்ஸ் கொண்டு உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த சாப் ஸ்டிக்ஸ் 4 ஆம் நூற்றாண்டில் சீனாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் வாழ்ந்த சீன தத்துவ மேதை கன்ஃபூஸியஸ் இதனைக்கொண்டு மாமிச உணவை சாப்பிடப் பரிந்துரைத்தவர் ஆவார். மாமிசத் துண்டுகள் நன்றாக வாணலியில் வதங்கவும் வேகவும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு சமைக்கப்பட்டன. ரைஸ் பவுலில் அரசி சாதம் இருக்கும். இதுதவிர காய்கறிக்கூட்டு, கீரை உள்ளிட்டவை சீன உணவில் இடம்பெற்றிருக்கும்.
![]()
|
மேலை நாட்டவர் போல கத்தி கொண்டு மாமிசத்தை அறுத்து சாப்பிடுவது உணவு வன்முறை என்பதால் அது நன்றாக இருக்காது எனக் கருதிய கன்ஃபூசியஸ் சாப் ஸ்டிக்ஸ் கொண்டு மாமிசத் துண்டுகளை எடுத்து சாப்பிட வலியுறுத்தினார். ஐந்தாம் நூற்றாண்டில் சாப் ஸ்டிக்ஸ் புகழ் சீனாவைத் தாண்டி ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவியது. மரம், உலோகம், பீங்கான், எலும்பு என பல பொருட்கள் கொண்டு அலங்கார வேலைபாடுகளுடன் சாப் ஸ்டிக்ஸ் தயாரிக்கப்பட்டன. ஆண், பெண், குழந்தை என அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்ற நீளத்தில் சாப் ஸ்டிக்ஸ் உருவாக்கப்பட்டன.
![]()
|
12ஆம் நூற்றாண்டில் ஷாங் மன்னர் வம்சம் புரான்ஸ் உலோகத்தால் ஆன விலையுயர்ந்த சாப் ஸ்டிக்குகளைப் பயன்படுத்தினர். இந்த சாப் ஸ்டிக்கில் உணவு சாப்பிடுவது அப்போது பெருமையாகக் கருதப்பட்டது.
![]()
|