மைசூரு--பணம் கொடுக்கல் வாங்கல் முன் விரோதத்தில், வாலிபரை நண்பர் வெட்டி கொலை செய்தார்.
மைசூரு நஞ்சன்கூடு அருகே உள்ள ஹெடியாளா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 27. ஹோட்டலில் பணியாற்றி வந்தார்.
இவரது நண்பர், இதே கிராமத்தை சேர்ந்த கிரிஷ், 27. இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிராம பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், மகேஷ் ஆட்டோவில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு கிரிஷ் வந்தார். மகேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஆத்திரத்தில் அரிவாளால் மகேஷை சரமாரியாக வெட்டினார்.
படுகாயம் அடைந்தவரை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிரிஷ் கைது செய்யப்பட்டார்.